கலாமின் கனவை நிருபித்துக்கட்டிய சூரன் - ஜிஆர் கோபிநாத் - Story of G R Gopinath 

Story of G R Gopinath
Story of G R Gopinath


பேருந்து வசதி கூட இல்லாத கிராமத்தில் பிறந்து ஒருவரால் விமானத்தின் உரிமையாளராக முடியுமென்பது இன்று வரை விடை இல்லாத கேள்வியாகவே இருந்தது.


ஆனால் இவர் முயற்சிக்கும் பொழுது அது விடை ஆக மாறியது கனவுகளை நனவாக்கும் போராட்டத்திற்கு வானமே எல்லை என்பதை உணர்ந்த இவர் அந்த வானத்தையே தனக்கு எல்லையாக கொள்ளும் கனவவை கண்டார்.


உண்மையில் இவரின் ஆசை மட்டும் கனவைக் கேட்டு எள்ளி நகையாட அவர்கள் யாரும் இல்லை `பஸ்ல போக முடியாது அவனுக்கு ஏரோபிளேன் கேக்குதா` என்பதே பலரின் கேள்வியாகவும் விடையாகும் இருந்தது.

இருக்குறத விட்டுட்டு படுக்குறதுக்கு ஆசைப்படாத ன்னு சொல்லியவற்களுக்கு மத்தியில் இருக்கின்றதை வைத்துக்கொண்டே பறக்க முடியும் என்று சொல்லி பயணத்தை ஆரம்பித்தார் ஜி ஆர் கோபிநாத்.


ஆரம்பகாலத்தில் இந்தியாவிற்காக ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை விதையாகி அது துளிர்த்து விருட்சமாய் வளர்ந்து தன்னுடைய இருபதாவது வயதில் ராணுவத்தில் சேர்ந்த கோபிநாதிற்கு ஆரம்பமே சவால் நிறைந்ததாக இருந்தது.


வங்கதேச சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்திற்காக போரில் கலந்து கொண்ட இவருக்கு ராணுவ வாழ்க்கை மிகப் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது ராணுவ சேவைகளைப் புரிந்து கொண்டிருந்த கோபி நாட்டிற்கு வாழ்வின் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது அந்த எண்ணத்துடன் தனது 28 வயதில் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தனது அடுத்தகட்ட வாழ்க்கை எல்லை காவல் வீரனை விட கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்தியது.


ராணுவ போரில் பங்கெடுத்த அவருக்கு அதைவிட எந்த சோதனை வந்தாலும் அதை எதிர்த்துப் போராட உள்ளத்திலும் உடம்பிலும் தெம்பை இந்திய ராணுவம் கொடுத்து இருந்தது.


சொந்த ஊருக்கு சென்று தன் கனவைத் இதைத்துவிட்டு தன் உழைப்பை உரமாக்கி பல தொழில்களை மேற்கொண்டு கோபிநாத் பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு ,பால் விற்பனை,பங்கு சந்தை மற்றும் மோட்டார் சைக்கிள் தரகர் என்று பல இடங்களில் தன் தடத்தைப் பதித்தார்.


செய்த தொழில் வெற்றி நல்ல சம்பாத்தியம் இருந்தும் அவரது அடி மனதில் உண்டான வான் பசிக்கு மட்டும் தீனி கிடைக்கவில்லை.


அங்கு திருப்தி அடைந்ததாக கோபிநாத்தின் மனது தனக்கான இலக்கை நோக்கி தனது பார்வையை வீசியது அந்தப் பார்வை சென்றது வானை நோக்கி.


வானம் குறிப்பிட்ட மக்கள் மட்டுமே பறக்க இயலும் என்ற எண்ணம் கொண்ட காலம் அது விமானமும் வானமும் சாமானிய மனிதர்கள் தலை உயர்த்தி மட்டுமே பார்க்க இயலும் என்பதை மாற்ற நினைத்தார் கோபிநாத்.


இதைப் பார்க்கும் எளிய மனிதனும் வானில் பறக்கலாம் என்ற எண்ணத்தை லட்சியம் ஆக்கி அதனை நோக்கி எட்டு வைத்த கோபிநாத்துக்கு இலக்கு மட்டுமல்ல அதையும் கடினமாகத்தான் இருந்தது

தனது எண்ணத்தையும் அதற்கான செயல் முறையையும் எடுத்துக் கூறி அவருக்கு கிடைத்தது முடியாது என்ற பதிலும் நிராகரிப்பும் மட்டுமே .


ஏளனங்கள் தோல்விகள் ஏமாற்றங்கள் போன்ற இறக்கங்களை காணும் மனிதன் அதில் இருந்து எழுந்து ஏறி வர அந்த வானமே எல்லை என்பதை நிரூபிக்கும் முதல் வாய்ப்பு ஜிஆர் கோபிநாத்துக்கு கிடைத்தது 1997ஆம் ஆண்டு.


தனது நண்பர்களின் துணையுடன் தனது நிறுவனத்தை 1971ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கினார் கோபிநாத் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் பயணிக்க ஏதுவாக ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வான்வழி போக்குவரத்தில் முதல் புரட்சியை உண்டாக்கினார் இந்த சூரன்


ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் இந்த சோதனை முயற்சியை வெற்றிகரமாக மட்டுமில்லாமல் பிரபலமான திட்டமாகவும் அமைந்தது இதன் மூலம் வான் சேவையில் தனது காலடி பதிக்க தொடங்கிய கோபிநாத் அடுத்த கட்டமாக தனது வாழ்நாள் லட்சியமான சாமானிய மக்களுக்கான விமான சேவையைத் தொடங்கினார் 2003ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் விமான சேவையைத் தொடங்கிய கோபிநாத் குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களையும் பயணிக்க வைத்தார்.


இன்றைய காலகட்டத்தில் குறைவான கட்டணத்தில் விமான சேவை வழங்கியது இவரது நிறுவனமே ஒரு சிலருக்கு மட்டுமே விமானசேவை என்று கூறிவந்த கட்டத்தில் அனைவருக்கும் விமான சேவையை வழங்கியது இவர் மட்டுமே.

நடுத்தர மக்கள் பலரின் விமான கனவை நனவாக்கிய பெருமை இவரின் கனவிற்கு கிடைத்த பலன் ஆக மாறியது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்த விமான சேவையை நடுத்தர மக்களுக்காக வழங்கிய கோபிநாத் தனது விமான சேவையை மற்றொரு நிறுவனத்துடன் இணைத்து கொண்டார்.


அங்கிருந்து தனக்கு பிரதான தொழிலாக விமான சேவையை கையில் எடுத்துக்கொண்டார் கோபிநாத் வாழ்வின் பல முகங்களைக் கொண்டவர் இதில் துவண்டு விடாமல் தனது தூண்டுகோலாக மாற்றிக்கொண்டு இருந்தார் . தனது தோல்விகளை தனது பாடங்கள் ஆக்கிக் கொண்டவர் 2009 ஆம் ஆண்டு சரக்கு விமான சேவையைத் தொடங்கினார்.


இதன்மூலம் தனது வெற்றியை வானில் நிலைநாட்டிக் கொண்ட கோபிநாத் உண்மையில் தனது கனவுகளுக்கு இறக்கை கட்டி பறக்க விட்டுள்ளார் .


கனவுகள் உன்னை உறங்க விடாமல் செய்ய வேண்டும் என்ற கனவு நாயகனின் கூற்றை தனது வாழ்வின் மெய்ப்பித்துக் காட்டுகின்றன இந்த கோபிநாத் கண்ட கனவையும் நடுத்தர மக்களின் ஆசைகளையும் நிறைவேற்றி கோபிநாத் எனும் சூரரை என்றும் போற்றுவோம்.

ராமர் பாலம் - கதையல்ல நிஜம் - Bridge is not a story - it is the truth