Bridge is not a story - it is the truth ராமர் பாலம் - கதையல்ல நிஜம்

Ranar bridge
Ramar Bridge 


ராமர் பாலம் செய்தி மீண்டும் வந்துள்ளது இந்த தடவை திமுகவும் பிஜேபி கிளம்பவில்லை அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி நிலையம் இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.


அதன் பெயரே சயின்ஸ் சேனல் அடுத்த நாள் படை கண்டுபிடிக்கமுடியாத புராதான புதிர்களை யாக அந்த சேனல் ஒரு ஆராய்ச்சியை தொடர தயாரித்துள்ளது இரண்டு நிமிட டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கண்டுபிடித்த தகவல்கள் அதன் செயற்கைக்கோள்கள் எடுத்து அனுப்பிய படங்கள் ஆகியவற்றை கடலடி ஆராய்ச்சியில் புகழ்பெற்ற வெவ்வேறு நிபுணர்களைக் கொண்டு விரிவாக அலசி உள்ளனர்.


அதன் மூலம் கிடைத்திருக்கும் உண்மைகள் பிரம்மிக்க வைக்கிறது என்கின்றனர் தொல்பொருள் ஆய்வாளர்கள்.


ராமர் பாலம் கட்டுக்கதை என்று சொல்பவர்கள் முன்வைக்கும் பல வாதங்களை இந்த உண்மைகள் தகர்த்து தவிடு பொடியாக்கி கின்றன உதாரணமாக தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் நடுவில் உள்ள இந்த பாலம் போன்ற அமைப்பு காலப்போக்கில் கடல் அலைகளால் உருவான மணல்மேடு என்பது ஒரு வாதம்.


இப்போது தெரியவந்துள்ள உண்மை என்னவென்றால் அந்த மணல் அந்த இடத்தில் நான்காயிரம் ஆண்டுகளாக இருக்கிறது ஆனால் அதன் மேல் வரிசையாக இருக்கும் பாறைகள் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை என்பதாகும் அங்குள்ள மணலுக்கும் அதன் மேலுள்ள பாறைகளுக்கும் சம்பந்தமில்லை பாறைகள் எல்லாமே தொலைதூரத்தில் வேறு எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டவை.


இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சென்டர் ஆஃ ரிமோட் சென்சிங் மையம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவலுடன் ஒத்துப்போகிறது.


இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கடலில் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாறைகளில் வரிசையாக அடுக்கி வைத்ததுபோல இயற்கையாக நடக்க சாத்தியமே இல்லையென்பதால் நிச்சயமாக இது செயற்கையாக உருவாக்கப்பட்ட பாலம் என ஆய்வுகள் ஊர்ஜிதம் செய்கின்றன.


இன்னொரு சுவையான விஷயம் பாலத்தின் நீள அகலம் சம்பந்தமானது தலைமையில் வானரங்கள் அமைத்த பாலம் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் கொண்டது என்கிறது வால்மீகி ராமாயணம்


ஒரு யோஜனை என்பது ஐந்து மைல் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நீளம் 500 மைல் அகலம் ஐம்பது மயில் என அர்த்தம் அத்தனை பெரிய பாலம் சாத்தியமில்லை எனவே யோஜனா பின் அளவு ஐந்து மயில் தானா என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.


அதேசமயம் நீளம் எத்தனை மயில் அல்லது அடியோ அதில் பத்தில் ஒன்று அகலமாக இருக்க வேண்டும் என்பது பாலம் கட்டுவதில் இன்றும் பின்பற்றுகின்ற விதி அப்படி பார்க்கும் போது ராமர் பாலத்தின் நீளம் 30 மயிலாக இருப்பதும் அகலம் 3 மயிலாக இருப்பதும் ஆச்சரியமான விஷயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கடலுக்குள் 30 மைல் நீளத்திற்கு பாறைகளால் பாலம் அமைப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத சாதனை என விஞ்ஞானிகள் பிரமிப்புடன் தெரிவிக்கின்றனர்.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கடல் பகுதி ஆழம் குறைந்ததாக இருந்துள்ளது மணல் மேடாகவும் இருந்துள்ளது ஆனால் பானைகளும் ஆயுதங்களும் செல்வதை தாங்கும் பலம் மணலுக்கு கிடையாது அதே மாதிரி பாறைகளைத் தூக்கி வந்து வைத்தாலும் மணல் தாங்காமல் சரிந்துவிடும் எனவே முதலில் மரங்களை வெட்டிப்போட்டு மணலை மூடி அதன் மேல் பாறைகளை அடுக்கி பானம் அமைத்ததாக ராமாயணம் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கின்றனர்.


சயின்ஸ் சேனல் நிகழ்ச்சி ஒளிபரப்பை தொடங்கும் போது ராமர் பாலம் குறித்த மேலும் சுவையான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் தனுஷ்கோடி மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாறும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.